Skip to content
Lyricshala
devotional lyrics

Nacciyar Tirumoli Lyrics in Tamil

Nacciyar Tirumoli
Artist page Genre hub
About this composition: read the full lyrics, browse the song meaning, and move between artist, genre, and language pages without losing the reading flow.

Full Lyrics

தையொரு திங்களும் தரைவிளக்கித்       தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள், ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து       அழகினுக் கலங்கரித் தனங்கதேவா, உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி       உன்னையு மும்பியை யும்தொழுதேன், வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை       வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. 1

வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து       வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து, முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து       முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா, கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு       கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி, புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்       இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2

மத்தநன் னறுமலர் முருக்கமலர்       கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி, தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து       வாசகத் தழித்துன்னை வைதிடாமே, கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு       கோவிந்த னென்பதோர் பேரேழுதி, வித்தகன் வேங்கட வாணனென்னும்       விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3

சுவரில் புராணநின் பேரேழுதிச்       சுறவநற் கொடிகளும் துரங்கங்களும், கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்       காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா, அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்       ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள், துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்       தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4

வானிடை வாழுமவ் வானவர்க்கு       மறையவர் வேள்வியில் வகுத்தஅவி, கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து       கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப, ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று       உன்னித் தெழுந்தவென் தடமுலைகள், மானிட வர்க்கென்று பேச்சுப்படில்       வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5

உருவுடை யாரிளை யார்கள்நல்லார்       ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல் தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்       திருந்தவே நோற்கின்றேன் காமதேவா, கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்       கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத் திருவுடை முகத்தினில் திருக்கண்களால்       திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்       கட்டி யரிசி யவலமைத்து, வாயுடை மறையவர் மந்திரத்தால்       மன்மத னே.உன்னை வணங்குகின்றேன், தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்       திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம், சாயுடை வயிறுமென் தடமுலையும்       தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7

மாசுடை யுடம்பொடு தலையுலறி       வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு, தேசுடை திறலுடைக் காமதேவா.       நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய், பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்       பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம் கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்       என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8

Meaning & Significance

Nacciyar Tirumoli has a very different emotional pulse from a simple praise hymn. Andal writes with longing, insistence, and a kind of holy boldness that feels intimate even now. The verses turn private desire into devotional speech, and that is why the text still feels alive to Tamil readers.

This page keeps to the source text from the Project Madurai file and stays with the opening verses of the work. That matters because readers usually arrive here wanting a clean Tamil reading experience first. They may already know the poem by memory, or they may be coming back to it after hearing it in a devotional setting. Either way, the goal is the same: let the words stay readable and faithful.

What makes the poem memorable is not only its devotion, but its emotional texture. Andal speaks with the urgency of someone who cannot separate love from worship. The result is a poem that feels both personal and communal. It can be read in a room alone, but it still sounds as if it belongs to a larger tradition of prayer.

The work also matters because it broadens what devotional Tamil can sound like. The voice is fierce, tender, and fully committed. Readers who want to understand why Andal remains so loved usually begin here, because Nacciyar Tirumoli shows just how wide devotional feeling can be.

Pronunciation Notes

Read the poem slowly enough for the repeated devotional names to land. The Tamil here carries a strong musicality, but it still benefits from clear pauses at the line breaks. Let the emotional pressure build gradually instead of rushing through the imagery.

In home recitation, the tone can be warm and intimate. In a group setting, the same lines gain force from repetition and shared breathing. On a phone, the short stanza layout here helps the eye keep the rhythm without losing the script.

About Andal

Andal is one of the most beloved poet-saints in Tamil devotional tradition. She is remembered for a voice that is both tender and resolute, and for poetry that makes devotion feel personal rather than distant. Her work remains central because it speaks with feeling, not just doctrine.

Readers often come to Andal through Tiruppavai, but Nacciyar Tirumoli shows another side of her voice. It is more expansive and emotionally layered, and it gives a fuller sense of how she turns longing into worship. That is why the poem remains important both as literature and as living devotional text.

For a lyrics page, Andal matters because her words are still actively searched, recited, and loved. Keeping the Tamil text visible lets modern readers connect with that devotional life directly, without flattening the poem into summary.

Frequently Asked Questions

What is Nacciyar Tirumoli?

Nacciyar Tirumoli is a Tamil devotional work by Andal. It is known for its intimate tone, emotional force, and strong devotional longing.

Why is Andal important in Tamil literature?

Andal is important because her poetry helped define the emotional language of Sri Vaishnava devotion. Her verses are still widely read, sung, and remembered.

Is this page useful for chanting?

Yes. The Tamil layout is meant to stay readable for chanting, quiet devotion, and direct source-based reading on any screen.