Tiruvarutpa Lyrics in Tamil
TiruvarutpaFull Lyrics
This page preserves the opening verses from the first tirumurai in the Project Madurai source and stops before the much larger remainder of the work.
திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் திறலோங்கு செல்வம்ஓங்கச் செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம் திகழ்ந்தோங்க அருள்கொடுத்து மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க வளர்கருணை மயம்ஓங்கிஓர் வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கிஞான உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில் ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும் உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க உய்கின்ற நாள்எந்தநாள் தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது பசுஏது பாசம்ஏது பத்திஏ தடைகின்ற முத்தியே தருள்ஏது பாவபுண் யங்கள்ஏது வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை மனம்விரும் புணவுண்டுநல் வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு மலர்சூடி விளையாடிமேல் கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு கலந்துமகிழ் கின்றசுகமே கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும் கயவரைக் கூடாதருள் தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில் துணைஎனும் பிணையல்அளகம் சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல் சுழிஎன்ன மொழிசெய்உந்தி வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என மங்கையர்தம் அங்கம்உற்றே மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி மாள்கநான் வாழ்கஇந்தப் படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப் படிஎன்ன அறியாதுநின் படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ படிஎன்னும் என்செய்குவேன் தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை மதித்திடுவ தன்றிமற்றை வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின் மாட்டினும் மறந்தும்மதியேன் கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு கடவுளர் பதத்தைஅவர்என் கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும் கடுஎன வெறுத்துநிற்பேன் எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை என்னை ஆண் டருள்புரிகுவாய் என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே என்றன்அறி வேஎன்அன்பே தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும் பசுகரணம் ஈங்கசுத்த பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப் பதியோக நிலைமைஅதனான் மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவில்மெய்ஞ் ஞானமயமாய் வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே வந்துணர்வு தந்தகுருவே துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே துரிசறு சுயஞ்சோதியே தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே சொல்லரிய நல்லதுணையே ததிபெறும் சென்னையிலக கந்தகோட் டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
The source page is very large, so this file preserves the verified opening cluster rather than pretending to hold the entire work in one pass.
Meaning & Significance
Tiruvarutpa is one of the most distinctive devotional works in Tamil because it treats grace as something living, overflowing, and morally serious at the same time. Vallalar’s voice is not narrow or merely ceremonial. It is wide, compassionate, and filled with a sense that divine grace should touch every living being. That is a major reason the text still matters.
The opening verses praise a sacred presence in terms of light, abundance, blessing, and care. The poetry keeps circling back to growth, fullness, and mercy. That matters because the emotional movement is not from fear to reward; it is from desire to grace. Readers who love Vallalar often love him precisely for that ethical tenderness.
For a lyrics page, preserving the opening verses is useful because the beginning already tells you what kind of devotion this is. It is devotional, yes, but it is also expansive. The language feels like a blessing on the world rather than a narrow private petition. That makes the text especially moving for readers who search for Tamil devotional literature with a compassionate tone.
This page stays close to the source because the source itself is large and layered. By keeping the opening section clean, the page becomes more usable for searchers who want the opening voice without losing themselves in a huge inherited text. It is a practical compromise, but it is still source-faithful.
Pronunciation Notes
Read the Tamil with a slow, reverent pace and let the repeated sounds breathe. Vallalar’s lines have a strong musical current, so the best reading is not rushed. The devotional power comes through when the phrases are allowed to settle one by one.
For mobile use, it helps to treat each stanza as a separate unit rather than trying to absorb the whole block at once. The opening verses are dense with praise and spiritual imagery, so the eye and voice should move together carefully.
About Ramalinga Adigal (Vallalar)
Ramalinga Adigal, remembered widely as Vallalar, is one of Tamil devotional literature’s most compassionate voices. His work is often associated with grace, ethical seriousness, and a broad sense of spiritual care. Readers continue to return to him because he offers devotion that feels expansive rather than narrow.
That matters for a lyrics site because people searching Vallalar usually want both the text and the mood. His poems are not only to be read; they are to be felt. The opening of Tiruvarutpa shows that immediately by rooting devotion in abundance, blessing, and divine radiance.
Vallalar’s importance is also practical. His poetry remains readable because it speaks in a devotional register that still feels alive. It does not sit far away in literary history. It still sounds like a living prayer, which is exactly why it fits Lyricshala well.
This page keeps the emphasis on source text, opening verses, and devotional clarity so readers can enter Vallalar’s world without getting lost in editorial noise. That is the right approach for a work of this scale.
Frequently Asked Questions
What is Tiruvarutpa?
Tiruvarutpa is Vallalar’s major Tamil devotional work, known for its emphasis on grace, compassion, and spiritual abundance. This page preserves the opening verses from the Project Madurai source.
Why does this page not show the entire work?
Because Tiruvarutpa is very large, and this page keeps the verified opening section that can be presented safely and clearly without guessing beyond the source.
What should a first-time reader notice?
A first-time reader should notice the tenderness of the devotional tone. Vallalar’s language feels expansive and blessing-oriented, which gives the opening verses a very distinct emotional signature.