Tiruppallandu Lyrics in Tamil
TiruppallanduFull Lyrics
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம் மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. (2)
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோம் ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. (3)
ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. (4)
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. (5)
எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில் அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. (6)
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம் மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. (7)
நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. (8)
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. (9)
எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. (10)
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன் செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன் நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (11)
பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும் வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (12)
Meaning & Significance
Tiruppallandu works like a devotional blessing before it works like a hymn. The speaker is not asking for a private favor; the speaker is offering auspicious wishes, long life, and protection to the Lord. That inversion matters because it sets the mood for the whole Sri Vaishnava tradition. Before teaching, before praising, before arguing theology, the text begins with reverence and care.
For readers today, the hymn still feels practical. It is short, memorable, and strong in rhythm, so it works well in temple recitation, family worship, or personal reading. The repeated wish for pallandu creates a sense of continuity across generations. The words feel ancient, but the purpose is immediate: cultivate humility, place the divine at the center, and start devotion with blessing rather than demand.
The page is formatted to make that devotional use easy. The verse text stays close to the source, while the surrounding explanation helps searchers understand why this hymn is loved as both literature and prayer. It is a lyric page, but it also carries the emotional weight of a ritual opening.
About Periyalvar
Periyalvar is remembered as one of the great Alvar saints of the Sri Vaishnava tradition. His poetry is direct, warm, and emotionally accessible, which is one reason it continues to travel well through home worship and public chanting. Rather than sounding distant or polished in a literary-only sense, his verses feel lived-in. They sound like devotion spoken by someone who actually means it.
Tiruppallandu reflects that style clearly. It does not build suspense or narrative in a modern song sense. Instead, it opens with praise and keeps returning to it. That simplicity is a strength, not a weakness. It gives the reader a stable devotional surface to return to, especially on a lyrics site where people often arrive through search and want the text fast.
Periyalvar’s place in the Divya Prabandham is not only historical. He represents the kind of devotional voice that makes sacred poetry usable in ordinary life. That is exactly why this page keeps the structure clean and searchable while preserving the Tamil source text.
Frequently Asked Questions
Who sings Tiruppallandu?
It is traditionally attributed to Periyalvar and is sung within Sri Vaishnava devotional practice.
What does pallandu mean?
Pallandu is a blessing for long life and well-being, especially when offered to the divine.
Why is Tiruppallandu often placed at the beginning of a devotional set?
Because it functions as an auspicious opening, setting a tone of reverence before other hymns or prayers.